வள்ளப்பட்டை கொண்டு சென்றவர் நான்கு வழக்குத் தவணைகளுக்கு செல்லாது இருந்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (18) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு, கல்லியன்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பகுதியிலிருந்து திருகோணமலைக்கு இரண்டு கிலோ வள்ளப்பட்டையை கொண்டு சென்ற போதே கைது செய்யப்பட்டு அப்போது பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலே நான்கு வழக்குத் தவனைகளுக்கு செல்லாது இருந்த வேளையில் கைது செய்து பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
