அம்பாரையில் அமைதியாக முறையில் புதிய புரட்சியினை ஏற்படுத்த நீங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே முடியும் அ.இ.ம.க வேட்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர்


எம்.எம்.ஜபீர்-
ம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக அமைதியாக முறையில் புதிய புரட்சியினை ஏற்படுத்த நீங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே முடியும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

நாவிதன்வெளி 6ஆம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற முக்கியஸர்களின் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை தொகுதியில் தனிநபரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாகவும், மக்களை பற்றிய எந்த விடயமும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும், அந்தவகையில் பார்க்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனிற்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முதல்தடைவயாக அம்பாரை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 33,000ஆயிரம் வாக்களித்த மக்களை கௌரவபடுத்த வேண்டும் அந்த மக்களுக்கு பிரநித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக அதிகபட்சமாக வாக்களித்த சம்மாந்துறை தொகுதிக்கு அந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரநித்துவம் வழங்கப்பட்டது.
இதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிகமான வாக்களித்த நிலையில் சம்மாந்துறை தொகுதிற்கு இரண்டு தடைவைகள் பாராளுமன்ற பிரநித்துவம் இல்லாமல் தவித்த போது குறைந்தது ஒரு வருடத்திற்காவது தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரநித்துவத்தினை தலைமைத்துவம் வழங்கவில்லை. ஆனால் சில பிரதேசங்களுக்கு இரண்டு பிரநித்துவங்களும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஊர்களை குறைகுறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை தலைமையத்தான் நாம் குறைகூற வேண்டும். மூன்று பிரதேச சபையினை பிரநித்துவப்படுத்தும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளரை கொண்ட இந்த தொகுதிற்கு ஒரு பிரநித்துவத்தை கொடுக்காமல் ஏனைய தொகுதிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக இந்த கட்சிக்கே வாக்களித்தால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எந்த விதமான மாற்றத்தினையும் காணமுடியாது இந்த தேர்தலில் புதிய மாற்றத்தினை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். எனக்கு நல்ல சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது இப் பிந்தங்கிய பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் இந்த சந்தர்ப்பத்தினை பெற்றுத்தாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இம்மாற்றத்தினை உருவாக்க உங்கள் ஒவ்வெருவருக்கும் முடியும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 33 ஆயிரமாக இருந்த வாக்கு கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 41 ஆயிரத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. எனவே இம்முறை பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற பிரநித்துவத்தை பெற்று சகல பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் இனங்கன்டு நிறைவேற்றும் கட்சியாக மக்கள் காங்கிரஸ் திகழும் எனவும் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -