அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை மோசடி வழக்கில் சந்தேகித்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.இதையடுத்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை அனுப்பியுள்ள அதிபர் டிரம்ப், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளார்.
