இடி-மின்னலுக்கு 83 பேர் பலியாகிய சோக சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது..!

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் விநியோகம், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகாரில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த 83 பேரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். நவாடாவில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில் தலா 6 பேரும் தர்பங்கா மற்றும் பாங்காவில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -