திருக்கோவில் ஆடீஅமாவாசை தீர்த்தோற்சவம் வழமைப்பிரகாரம் நடைபெறும். ஆனால் அன்னதானம் கடைத்தெரு களியாட்டங்களுக்கு தடை! 50பேர் அனுமதி!


காரைதீவு நிருபர் சகா-

ரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மகோற்சவம் வழமைப்பிரகாரம் நடைபெறவுள்ளது.

ஆனால் இம்முறை கொரோனா நிலைமையின்காரணமாக அன்னதானம் வழங்கல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் கடைத்தெரு வைக்கவும் களியாட்டங்கள் நடாத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு 50பேர் பூஜைவேளையில் கலந்து கொள்ளலாம் என ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

இம்மகோற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் திங்கட்கிழமை நண்பகல் 12மணிக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மென்டிஸ்அப்பு பிரசாத் திணைக்களத்தலைவர்கள் படையினர் பொலிசார் மற்றும் ஆலய நிருவாகிகள் கலந்துகொண்ட இககூட்டத்தில் சமகால கொரோனா நெருக்கடி காரணமாக உற்சவத்தை எவ்வாறு நடாத்துவது என்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை ஆடிவேல் உற்சவம் யூலை மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி யூலை மாதம் 20ஆம் திகதி நிறைவடையவிருக்கிறது. 18தினங்கள் அபிசேகபூஜைகள் இடம்பெறும். பிதிர்க்கடன் செலுத்தும் தீர்த்தோற்சவ பூஜை 20ஆம் திகதி நடைபெறும் என ஆலயதலைவர் சு.சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

யூலை மாதம் 01ஆம் திகதி வாஸ்துசாந்தியும் மறூநாள் யூலை 02ஆம் திகதி கும்பாபிசேக சங்காபிசேகமும் இடம்பெறும். தீர்த்தம் நிறைவுற்றதும் 21ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவும் 22ஆம் திகதி வைபரவர் பூஜையும் இடம்பெறும்.

இம்முறை ஆலயத்திற்கான விசேட பஸ்சேவை இடம்பெறாது. பக்தர்களைக்குறைக்கும் நோக்கத்துடன் பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


வேட்டைத்திருவிழாவிற்கான ஊர்வலமும் ஆக 50பேர் கலந்துகொள்ளத்தக்கதாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளுக்கமைய நடைபெறவிருக்கிறது எனவும் தலைவர் சு.சுரேஸ் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 27ஆம் திகதி ஆலயத்தில் அதிகாரசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஆலயநிருவாகிகள் திருவிழா உபயகாரர்கள் அழைக்கப்படவுள்ளனர் கொரோனதொண்டர் சபையொன்றும் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -