கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது.
இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்தார்.
இதற்கு முன் விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்பட இருந்தது.
எனினும் இன்று காலை விஷேட அறிவிப்பை வெளியிட்ட சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிரி, ஆகஸ்ட் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாது என்று கூறியுள்ளார்.
எனினும் தற்போது அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையத்தை திறக்கும் திகதியை அறிவித்தார்.