மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 107..!

ஜே.எப்.காமிலா பேகம்-

பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 107 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் பெருமளவு சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியாக வழங்கப்படும் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

மேலும், மோசமான வானிலை நிலவும் சூழலில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்து நிலையம் வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த ஜூன் 22ஆம் திகதியன்று பிகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படலாம் எனவும், அம்மாநிலங்களில் உள்ள நதிகளின் நீரோட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வனர்த்தம் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், “பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் மின்னலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற துயர்மிகு செய்தி கேட்டேன். மாநில அரசுகள் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த பேரழிவில் தங்களின் அன்புக்குரியோரை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -