ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் -கல்முனை முதல்வர் றகீப்.

அஸ்லம் எஸ்.மௌலானா-

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின்
திடீர் மறைவு மலையக சமூகத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

"நண்பர் ஆறுமுகம் தொண்டமானின் மரணச் செய்தி எமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு மலையக மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய வம்சாவளி மக்களுக்கு தனது நீண்ட கால போராட்டத்தின் ஊடாக பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் வாரிசான ஆறுமுகன் அவர்கள், தனது பாட்டன் விட்டுச்சென்ற பணிகளை தனது ஆளுமையினால் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வந்திருக்கிறார்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதும் சரி, எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் சரி, மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தோட்டத் தொழிலாளர்களின் சமபள உயர்வுக்காகவும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தேச்சியாக இவரது குரல் ஓங்கி ஒலித்து வந்தமை மலையக வரலாற்றில் மறக்க முடியாத பதிவாக அமைந்துள்ளது.

அவ்வாறே தனது அரசியல் பயணத்தில் பல தடவைகள் அமைச்சுப் பதவிகளை வகித்ததன் ஊடாக மலையகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் முன்னின்று உழைத்துள்ளார்.

இத்தகைய அரசியல் ஆளுமையின் எதிர்பாராத திடீர் மறைவு என்பது மலையக மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவரது மறைவினால் துயரடைந்திருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -