கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனை!

ஐ. ஏ. காதிர் கான்-

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வரும் அனைத்து பயணிகளையும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பி.சி.ஆர்.

 பரிசோதனைகளுக்குஉட்படுத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், இது தொடர்பில் சுகாதார சேவை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். 

அரசாங்கம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு திரும்பும் இலங்கையருக்கு கொரோனா தொற்று காணப்படுவது அவதானிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவதை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது. விமான நிலையத்தில் தற்சமயம் முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் விரிவு படுத்துவது அவசியமாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, விரைவில் பயணிகள் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி மற்றும் விமான சேவைகள் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -