கிழக்கு மகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.


எம்.என்.எம்.அப்ராஸ்-
கிழக்கு மகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாக நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகள் குளங்களில்
விடப்பட்டன.
இதற்கமைய மாவட்டத்தில் கல்முனை,நாவிதன்வெளி
அக்கறைப்பற்று, திருக்கோயில், பொத்துவில்,பதியத்தலாவ
,மஹாஓயா ஆகிய பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குளங்களுக்கு திலாப்பியா,கட்லாகட்லா,மிரிகால்,ரோகு, வகையான நன்னீர்
மீனினங்கள் கடந்த நான்கு தினங்களாக

(புதன் கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரையான காலப்பகுதியில் 27/05/2020-30/05/2020 ) விடப்பட்டு முதற்கட்ட செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதாக அம்பாறை மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
மேலும் இத்திட்டத்தை சிறப்பாக முன்கொண்டு செல்ல உதவிய, கிழக்கு மாகாண மீன்பிடி  திணைக்கள பணிப்பாளர்,அம்பாரை மாவட்ட அலுவலக நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்திஉத்தியோகத்தர்கள்,முகாமைத்துவ உதவியாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -