தொண்டமானுக்கு மலையக சமய தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் அனுதாபம் தெரிவிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு குறித்து சமய தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த ஆனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்த மலையக இந்து குருமார் ஒன்றியத்தினை செயலாளரும் அகில அலங்கை இந்து குருமார் சபாவின் தலைவர் சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா கருத்து தெரிவிக்கையில்.
மலையகத்திலே பல தசாப்த காலமாக மலையக மக்களுக்கு அனைத்து வகையிலும் அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுத்த பெருமை ஆறுமுகன் தொண்டமானையே சாரும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைந்த செய்தி ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கு இந்திய வம்சாவளி மக்களுக்கும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தில் உள்ளனர். . மலையக மக்களுக்கு இன்னும் பல விடயங்களை செய்ய இருக்கின்றன நிலையில் அவரின் உயிரை இறைவன் எடுததுக்கொண்டு எமமை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளான். மலையக மக்களுக்கு பெரும் பாடுபட்டு பல்வேறு உரிமைகளை பெற்றுத்தந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆத்மா சாந்தியடை வேண்டியும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அந்த கட்சி அங்கத்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்த அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர் கிசான் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் சாதாரணமாக தொழிலாகளாக இந்தியவிலிருந்து வருகை தந்த மக்களை அமைச்சர்களாகவும் வைத்தியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும் ஆசிரியர்களாகவும் பல துறைகளில் அமர்த்தி அவர்களை மாற்றி இந்த சமூகத்திற்கு பாரிய சேவையாற்றிய பெருமை இன்று ஆறுமுகன் தொண்டமானுக்கு அவரது குடும்பத்தினருக்குமே சேரும் இன்று எத்தனை விடயங்கள் அவர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் தனது 55 வது வயதில் உயிர் நீத்துள்ளார். அவரது சேவை அளப்பரியது அந்த சேவையினை மலையக தலைவர்கள் உணர்ந்து இனிவரும் காலங்களில் ஒன்றினைந்து செயப்பட்டு அவர் என்னென்ன இந்த சமூகத்திற்கு செய்வதற்கு எத்தனித்தாரோ அந்த சேவைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.அத்தோடு அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினைருக்கும் அவரது கட்சி அங்கத்தவ அனைவரும் ஆழ்ந்த துயரத்தினை தெரிவித்துக்கொள்கிறேன.; என அவர் மேலும் தெரிவித்தார்
இது குறித்த தம்பகொல்லே பத்மசிறி தேரர் கருத்து தெரிவிக்கையில் ஆறுமுகன் தொண்டமான் என்பவர் ஒரு சிறந்த தலைவர் அவர் இந்து சமயத்திற்கு மாத்திரமன்றி பௌத்த சயயத்திற்கும் பல சேவைகளை செய்தவர் தமிழ் சிங்கள் முஸ்லிம் என அனைத்து மக்களிடமும் சுமூகமாக பழகியவர.; அவரது இழப்பு மலையகத்திற்கு மாத்திரமன்றி முழு நாட்டிக்கு பேரிழப்பாகும் என தெரிவித்தார்.அவரது ஆத்மா சாந்திக்காக பிறார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -