அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது (படங்கள்)

க.கிஷாந்தன்-
லங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை (28.05.2020) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
மறுநாள் (29) கொத்மலை, வேவண்டனிலுள்ள தொண்டமான் 'பங்களாவில்' மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அதன் பின்னர் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.
மே 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -