நிந்தவூரைச் சேர்ந்த பீ.ரீ.ஏ. ஹஸன் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம்
 அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூரைச் சேர்ந்த பீ.ரீ.ஏ.. ஹஸன் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்துறைகளிலும் நிறைவான அறிவை பெற்றுள்ள இவர் இவ் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது வரவேற்கத்தக்கது.

மேலும் இவர் அரச சார்பற்ற பல்கலைக்கழகமொன்றின் பதிவாளராகவும் பணியாற்றுகின்ற அதேவேளை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் முன்னாள் பேரவை உறுப்பினராகவும் சேவையாற்றியதன் விளைவாக பல்கலைக்கழக முகாமைத்துவத்தில் அனுபவமுள்ள ஒரு சிறந்த நிர்வாகியாவார் என்பதோடு
பல தனியார் வர்த்தக நிறுவனங்களினது வர்த்தக அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின்
பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுமானிப் பட்டத்தினை கொண்டுள்ள இவர் வொல்வர்கம்ரன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப்பட்டத்தினையும், அவுஸ்திரேலியாவின் பொது கணக்காளர் நிறுவனம் மற்றும் இலங்கை மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் உறுப்பினராக பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -