கல்முனை மாநகர சபைக்கு கல்முனை சிற்றி பாமஸி நிறுவனம், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்யும் ஒரு தொகுதி சனிட்டைஸ் திரவியத்தை அன்பளிப்பு செய்துள்ளது.
இவற்றை இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.றாஜிஹ், இன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்தார்.
மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், வேலைகள் அத்தியட்சகர் வீ.உதயகுமார், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில், அதிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்ற கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் நலன்களை கவனத்தில் கொண்டே எமது நிறுவனத்தினால் இந்த சனிட்டைஸ் திரவியம் வழங்கி வைக்கப்பட்டதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.றாஜிஹ் இதன்போது தெரிவித்தார்.
கல்முனை சிற்றி பாமஸியின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டுக்கு வரவேற்புத் தெரிவித்த மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.றாஜிஹ் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
