கொரோனா வைரஸை மறந்து திரியும் யாழ் மக்கள்! ஆத்திரம் கொண்டிருக்கும் சுகாதாரப் பிரிவு

சுரேஸ் கண்ணன் -
ரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தலை மறந்து செயல்படுவதாக சுகாதார பிரிவினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று காலை 5மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில், பேருந்துகளிலும் சந்தைகளிலும் பொதுவெளிகளிலும் கூடும் பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதை மறந்து செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினையும் கருத்தில் கொண்டு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -