கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்.எப்.சி.டி. உதவி


அஸ்லம் எஸ்.மௌலானா-
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொருட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பதற்கான ஒரு தொகை மூலிகை மருந்துப் பொதிகள் எம்.எப்.சி.டி. நிறுவனத்தினால் அக்கரைப்பற்று அரச யூனானி மருந்து உற்பத்தி பிரிவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்பொதிகளை கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட திட்ட முகாமையாளர் எஸ்.எம்.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யூனானி மருந்து உற்பத்திப் பிரிவு மருத்துவ பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.நிஹாயா, கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் எம்.ஏ.நபில், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.பி.எம்.றஜீஸ் உட்பட யூனானி மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவ உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கரிசனையுடன் அரச சார்பற்ற நிறுவனமான எம்.எப்.சி.டி. முன்னெடுத்துள்ள இவ்வுதவித் திட்டத்திற்காக யூனானி மருத்துவ அதிகாரிகள் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -