கல்முனை வர்த்தக சங்கத்தினால் நான்காம் கட்ட நிவாரண உதவிகள் மௌலவி, முஅத்தின்களுக்கு வழங்க ஏற்பாடு !


எம்.எம். ஜெஸ்மின், நூருல் ஹுதா உமர்-
கொவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக இயல்வு வாழ்வை இழந்த மக்களின் பசியை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் பல கட்டமாக நிவாரப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக புனித ரமழானில் தமது இயல்வு வாழ்கையை இழந்த பள்ளிவாசல்களில் மார்க்க கடமை புரியும் முஅத்தின்கள் மற்றும் மௌலவிமார்களுக்கான நிவாரப்பணியை முன்னெடுக்கும் செயற்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) காலை கல்முனையில் முன்னெடுக்க ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக கல்முனை வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் கே.எம் சித்தீக் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச அனைத்து பள்ளிவாசல்களிலும் கடமை புரியும் சகல முஅத்தின்கள் மற்றும் மௌலவிமார்களுக்கும் வழங்கிவைக்கப்பட உள்ள இந்நிவாரண உதவிகள் கல்முனை வர்த்தக சங்கத்தினால் திரட்டப்பட்ட நிதி மூலம் வழங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் சுமார் 7 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியினை கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவிடுசெய்து கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு மூன்று கட்டங்களாக கல்முனை வர்த்தக சங்கத்தினர் வழங்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -