பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் வாழ்த்துச் செய்தி


"நோன்பிருந்து இறைவனிடம் செய்த பிரார்த்தனைகள் கைகூடும். எனவே, நெருக்கடிகளும்,சவால்களும் எமக்கு புதியவை அல்ல. அவற்றில் இருந்து மீண்டெழவும் கற்றுக்கொண்டுள்ளோம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் இருந்தம் விரைவில் மீண்டெழுவோம்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

" வருடம் முழுவதும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மகத்தான பயிற்சியை தரும் மாண்புமிகு மாதமே ரமழான். இப்புனித மாதத்தில் எடுத்துக் கொண்ட முப்பது நாட்கள் பயிற்சி வாழ்நாள் முழுவதும் பயன்தந்திட வாழ்த்துகிறேன்.

அதேபோல் நோன்பு நிறைவு பெறும் நன்நாளில் முகமது நபி போதித்த சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, பரிமாற்றம், ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை கடைபிடிப்போம்.

இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல வழிகளிலும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் முஸ்லிம் மக்கள் இலக்குவைக்கப்பட்டனர்.

ஆனால் சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டெழும் வல்லமை முஸ்லிம் சகோதரர்களுக்கு இருக்கின்றது. எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தும், சதிகளையெல்லாம் முறியடித்து அவர்கள் மீள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


கொடிய கொரோனா நோயில் இருந்து நாமும் நாடும் உலகமும் மீள வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம். அநீதிக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்." - என்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -