கொழும்பிலிருந்து ஒருதொகுதி இளைஞர் யுவதிகள் அட்டன் வருகை


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

கொரோனா தொற்றினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊடரங்கு சட்டத்தினால் கொழும்பிலிருந்து சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதிருந்த நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேச இளைஞர் யுவதிகள் ஒருதொகுதியினர் பொலிஸாரினால் 09/05 அழைத்துவரப்பட்டனர்
அந்தவகையில் ஹட்டன் மற்றும் நுவரெலியா பொலிஸ் மற்றும் அட்டன் பொலிஸ் நிலையங்களுக்கு இரத்மலானையிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது ஹட்டன் பொலிஸ்வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன்பிரீஜ், கினிகத்தேனை வட்டவலை,திம்புள்ளபத்தனை, ஆகிய பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையின் ஊடாக சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு வருகைைதந்த குறித்த இளைஞர் யுவதிகள்
பிரதேசங்களுக்கு பொறுப்பான பொது சுகதார பரிசோதகர்களினால் 14 நாட்களுக்கு சுயதனிமை படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுத்தபட்டு பின்னர் பொதுசுகதார பரிசோதகர்களினால் வழங்கபடுகின்ற சான்றிதழ்
குறித்த பொலிஸ் நிலைய பொறுகாரிகளுக்கு வழங்கி அவர்களின் ஊடாக ஹட்டன் பொலிஸ் வலையத்தின் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கபட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -