ரஹ்மத் பவுண்டேஷனின் "வீட்டுக்கு வீடு இப்தார்" நிகழ்வு நற்பிட்டிமுனையில் !!

அபு ஹின்சா-

ல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் வேண்டுகோளுக்கிணங்க நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் "வீட்டுக்கு வீடு இப்தார்" நிகழ்ச்சி திட்டம் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சி தொடரானது அகில இலங்கை இளம் பெண்கள் முஸ்லிம் சங்கத்தினால் (YWMA-SRILANKA ) முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. அதுமாத்திரமின்றி இவ்வமைப்பினால் பல பாரிய திட்டங்களை வரிய மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வைமைப்பிடம் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க வீட்டுக்கு வீடு இப்தார் என்ற நிகழ்வை நற்பிட்டிமுனை மக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்திலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -