எம்.ஏ.முகமட்-
கிண்ணியா சுகாதார அலுவலகப் பிரிவில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு தொற்றுன நீக்ககும் பணிகள் இன்று முன்னெடுக்கப் பட்டன.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் ,கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீம் தலைமையில் முன்னெடுக்கப் பட்டது.
கொரோனா கொவிட்19 அசாதாரண சூழ் நிலையில் நாளை ஊரடங்கு தளர்த்தப் படவுள்ளதால் பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள்,அரச மற்றும் தனியார் துறை இடங்களில் நகர சபை ஊழியர்களினால் கிருமி தொற்று நீக்கி தெளிக்கப் பட்டு வருகின்றது.
இத் தொற்றுலிருந்து அனைத்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான முன்னெடுப்புகளை கிண்ணியா நகர சபை செய்து வருகின்றது.
Attachments area
