இஸ்ரேல்மீதான முஸ்லிகளின் கவனத்தை திசைதிருப்பலும், ஈரான் மீது சதாம் ஹுசைனின் படையெடுப்பும்.


பதினாறாவது தொடர்...............

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

ஸ்ரேல் தனது இருப்பை பாதுகாப்பதற்காக தொடர்ந்து போரிடவேண்டி இருந்தது. இதில் தோல்வியடைந்தால் எமது யூத தேசம் கைவிட்டுப்போய்விடும் என்ற அச்சம் யூதர்களுக்கு ஏற்பட்டது.
இதனை தடுப்பதற்காக மத முரண்பாடுகளை மேலோங்கச் செய்வதுடன், தேசியவாதத்தை தூண்டிவிட்டால் முஸ்லிம்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்து அவர்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் கவனம் தங்களைவிட்டு திசைதிருப்பப்பட்டுவிடும் என்று யூதர்கள் சிந்தித்தார்கள்.
அத்துடன் இஸ்ரேல் உருவானதிலிருந்து மன்னர் ஷா தலைமையிலான ஈரான் தங்களுக்கு நீண்டகால நற்பு நாடாக இருந்தது. அங்கு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியினால் அது திடீரென எதிரி நாடாக மாறிவிட்டது.
தற்போது நற்பாக இருக்கின்ற ஏனைய இஸ்லாமிய நாடுகளும் எதிர்காலங்களில் எதிரி நாடாக மாறிவிடமாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. அது ஆட்சியாளர்களின் மனோநிலையை பொறுத்தது என்று யூதர்கள் சிந்தித்தார்கள்.

அத்துடன் இஸ்ரேலின் மேலதிக பாதுகாப்புக்காக மத்தியகிழக்கு பகுதியில் அமெரிக்கப் படைகளை நிரந்தரமாக காலூன்ற செய்வது அவசியம் என இஸ்ரேல் திட்டமிட்டது. ஆனாலும் அதற்குரிய சாத்தியம் அப்போது இருக்கவில்லை. அந்த சூழ்நிலை உருவாகும் வரைக்கும் அல்லது உருவாக்கப்படும் வரைக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் காத்துக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு அந்த நாட்டில் அதிரடி மாற்றங்கள் நடைபெற தொடங்கியது. மதச்சார்பற்ற நாடாக மேற்கத்தேய ஆடை கலாச்சாரம் மேலோங்கியிருந்த நாட்டில் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்துவது பாரிய சவாலாக இருந்தது.
மத்தியகிழக்கு நாடுகளில் ஈரான் அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட பெரிய நாடு. பல தசாப்தகாலமாக அந்த நாட்டினை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு சுரண்டிக்கொண்டிருந்தது அமெரிக்கா. இஸ்லாமிய புரட்சியினால் அது கைவிட்டுப்போனது அமெரிக்காவுக்கு பாரிய இழப்பாகும். இதனை அமெரிக்கா விரும்பவில்லை.
மறுபுறத்தில் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அது முக்கியத்துவம் வழங்கியதுடன், மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்காக களத்தில் போரிடுகின்ற பாலஸ்தீன போராளிகளுக்கு ஈரான் இஸ்லாமிய புரட்சியானது புதிய உட்சாகத்தை கொடுத்தது. இது இஸ்ரேலுக்கு கோபத்தை உண்டுபண்ணியது.
அதனால் இஸ்லாமிய புரட்சியாளர்கள் தங்களது ஆட்சியை பலப்படுத்திக்கொள்வதற்கு கால அவகாசம் வழங்காமல், உடனடியாக செயலில் இறங்க அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டது. அதற்காக இவர்கள் கையிலெடுத்த துரும்புதான் ஈரான் - ஈராக் எல்லைப் பிரச்சினையாகும்.

ஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் எல்லை பிரச்சினை இருந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது அமெரிக்கா. அப்போது ஈராக்கிய அதிபராக சதாம் ஹுசைன் இருந்தார். அவர் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்.

எல்லைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அமெரிக்கா ஈராக்கை தூண்டியது. தனக்கு எதிரான ஆட்சியாளர்களை அழிப்பதற்கு அமெரிக்கா தன்னை பயன்படுத்துகிறது என்றும், சகோதர முஸ்லிம் நாடுகளுக்கிடையில் சண்டையை மூட்டிவிடுகிறது என்றும் சதாம் ஹுசைன் சிந்தித்திருப்பார். ஆனாலும் இதற்கு பின்னணியில் யூதர்கள் உள்ளார்கள் என்பதனை அறிந்திருப்பாரோ தெரியவில்லை.

இதனை வெறும் எல்லைப் பிரச்சினையாக மட்டும் நோக்காமல் சீயா - சுன்னி பிரச்சினையாகவும் சித்தரிக்கப்பட்டது. மத்தியகிழக்கில் பெரும்பான்மையாக உள்ள சுன்னிப்பிரினர்களின் ஆதரவை பெறுவதற்காக அமெரிக்காவுடன் சேர்ந்து சதாம் ஹுசையினால் இந்த பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது.

இஸ்ரேலின் மறைமுக திட்டமிடலுடன் அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் ஈரானுக்கு எதிராக சதாம் ஹுசைன் போரை துவங்கினார். இந்த போரை ஈரான் எதிர்பார்க்கவில்லை. ஆட்சியை கைப்பேற்றி தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளாத நிலையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஆரம்பத்தில் சில பிரதேசங்களை ஈரான் இழந்தது.

பின்பு அமெரிக்காவின் எதிரி நாடுகளிலிருந்து அவசர அவசரமாக ஆயுத உதவிகளை பெற்றுக்கொண்டு ஈரான் தொடர்ந்து போரிட்டது. ஈராக் எதிர்பார்த்ததுபோல யுத்தம் அமையவில்லை. ஆரம்பத்தில் இழந்த நிலங்களை ஈரான் மீண்டும் கைப்பேற்றியதுடன் கள நிலவரம் ஈரானுக்கு சாதகமாகவே இருந்தது.

ஈராக்கின் இந்த படையெடுப்பு விரைவில் முடிவடைந்துவிடும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எட்டு வருடங்களையும் தாண்டி சென்று அர்த்தமில்லாத சண்டையாக இருந்தது. இரு நாடுகளிலும் பல இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டு, கணக்கிட முடியாத பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டது.

சதாம் ஹுசைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்காவும், பண உதவிகளை சவூதி அரேபியாவும் வழங்கியது. இந்த யுத்தத்தினால் அமெரிக்கா எதிர்பார்த்த பலனை அடையவில்லை. மாறாக ஈரானும், ஈராக்கும் தங்களை இராணுவரீதியில் பலப்படுத்திக்கொண்டது.

தொடரும்.......................................
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -