.இரண்டாம் கட்ட கொரோனா வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வுணதீவில் 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாகொடுப்பனவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நேற்று 20 ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப்பணியில் உதவிபிரதேச செயலாளர் திருமதி சுபா,சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கலைச்செல்விவாமதேவன்உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாகொடுப்பனவு வழங்கும் மேற்பார்வை கடமையில் ஈடுபட்டனர் .

இதன்படி இப்பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெரும் குடும்பங்கள் 7640 க்கும் காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள் 2250க் கும் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பம் 268 க்கும் மேல்முறையீடு செய்த 48குடும்பங்களுக்குமாக இப்பிரிவில் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் ரூபா 10 ஆயிரத்தி 206 குடும்பங்களுக்கு வழங்கப் படவுள்ளது .

இந்தபணிகளில்உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் ,முகாமத்துவபணிப்பாளர் கே.தங்கதுரை சமுர்த்தி புது மண்டபதடி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தில்லையம்மா , கரவெட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அசோக்குமார் பிரியதர்சினி மகிழவட்டவான் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புவனேஸ் வரி ஜெயசிங்கம்,ஆயித்தியமலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கிரிஸ்ணவேணிகநேசனாதன்ன் ஆகியோரும் ஈடுபட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -