சனநடமாட்டம் இல்லாத போதிலும் மலையக நகரங்களிலும் வெசாக் அலங்காரங்கள் ஜொலிக்கின்றன.


அட்டன் கே.சுந்தரலிங்கம்-
வெசாக் மற்றும் சித்திராப்பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு இன்று பௌத்த விகாரைகள் இந்து ஆலயங்கள் மலையக நகரங்கள் ஆகியவற்றில் சனநடமாட்டம் இல்லாதபோதிலும் வெசாக் அலங்காரக்கூடுகளால் நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.மக்கள் நடமாட்டத்தினை குறைத்து சமூக இடைவெளியினை பேணுவதற்காகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனினும் இன்று வெசாக் பௌர்ணமி தினம் என்பதால் மலையகத்தில் காணப்படும் அட்டன் கொட்டகலை ராகலை நோர்வூட், மஸ்கெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பௌத்த கொடிகளாலும் வெசாக் அலங்காரக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்ததன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -