ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தி


ஆதிப் அஹமட்-
லகம் பூராக ஈதுல் ஃபித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் விடுத்துள்ள பெருநாள் விசேட வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புனித நோன்பையும் பெருநாளினையும் ஒரு வித்தியாசமான சூழ்நிலையிலே நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கின்றோம்.ஆயுட்காலத்திலே சந்தித்திராத ஒரு விஷேடமான சூழ்நிலையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.கொரோனா நோய் அச்சம் உலகெங்கிலும் ஆட்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் உலகம் மீண்டும் ஒரு மீழ்வாசிப்பு சூழ்நிலையினை நோக்கி நகர்ந்திருக்கின்றது.இந்த சூழ்நிலை நம் ஒவ்வொருவருக்கும் நம் ஒவ்வொருவரின் செயற்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்துகொள்வதற்கான நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.இம்முறை புனித றமழான் காலத்தில் பள்ளிவாயல்களில் அமல்கள் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும் நம் குடும்பங்களோடு வீடுகளிலே நல்லமல்கள் செய்யக்கூடிய பெறுமதியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதுபோலவே குடும்பங்களோடும் மிக நெருக்கமான முறையில் இந்த பெருநாளையும் கொண்டாட பெறுமதியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே வீடுகளில் சுகாதார துறையினரின் வழிகாட்டல்களை பின்பற்றி சட்டங்களையும் மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் என யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -