மருதமுனையின் மூத்த கல்வியலாளரும்,ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.எச்காதர் இப்றாஹிம் இன்று காலமானார்


பி.எம்.எம்.ஏ.காதர்- ருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கும்,மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கும்,மருதமுனையின் கலை,இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்த கல்வியலாளரும்,ஓய்வு பெற்ற முன்னாள்; கல்விப் பணிப்பாளருமான முகம்மது ஹனிபா காதர் இப்றாஹிம்;(வயது 76) அவர்கள் இன்று(23-05-2020) காலமானார்.

1944ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்று 1964.06.01ஆம் திகதி அவர் கற்ற பாடசாலையிலேயே ஆசிரியரானார்.19977ஆம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி கொழும்பு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை பூர்;த்தி செய்து கலைப்பட்டதாரியானார்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி,காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.பொத்துவில் பிரதேசத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளராவும் கடமையாற்றியுள்ளார்.இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தி பெற்று கல்வி நிருவாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்று கல்முனை கல்வி வலயத்தில் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றி 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இவற்றுக்கு மேலதிகமாக 1981ஆம் ஆண்டு தொடக்கம்1987ஆம் ஆண்டுவரை கல்முனை வடக்கு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும் நியமனம் பெற்று இப்பிரதே மக்களுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார்.மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காக கல்விப்பணி மன்றம் ஒன்றை உருவாக்கி மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ளார்.

பயங்கரவாத கால கட்டத்தில் மருதமுனையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதான சபையுடன் இணைந்து காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார்.சமூக சேவையில் மிகவும் ஆர்வமுடன் செயற்பட்டுள்ளார்;.மருதமுனையை கல்வியால் முன்னேற்றுவதில் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டுவந்தவர் இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று(23-05-2020)இரவு 9.30மணிக்கு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இவர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களின் மாமனார் ஆவார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -