முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வாகரையில் தடை


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரை பிரதேசத்திற்கு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர்கள் பணிச்சன்கேனி பாலத்தில் வைத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஷ் பின்வருமாறு கருத்து தொரிவித்தார்.
இதேவேளை இன்றைய நிகழ்வு தொடார்பாக செய்தி சேகாரிக்கச் சென்ற ஊடகவியலாளார்கள் வாகரை பொலிசாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -