மறைந்த தலைவர் தொண்டமானுக்கு கட்சி பாராமல் மலையக மக்கள் அஞசலி.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமாக நேற்று (26) திகதி சுகயீனமுற்று மரணமடைந்தனையடுத்து மலையகத்தில் பல பகுதிகளிலும் கட்சி தொழிற்சங்கம் பாராமல் மக்கள் அஞசலி செருத்தி வருகின்றனர்.
கொட்டகலை,டிக்கோயா,நோர்வூட் மஸ்கெலியா என பல நகரங்களிலும் தோட்டங்களிலும் மலையக மக்கள் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி பேதங்களை பாராமல் மக்கள் அவரது உருவப்படத்தினை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொட்டகலை கே.ஓ.டிவிசனை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மறைந்த தலைவர் தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வெள்ளைக்கொடிகளால் அலங்கரித்து உருவப்படத்தினை வைத்து விளக்கேற்றி மலர்களை தூவி தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவர்கள் கருத்து தெரிவிக்கையில் தொண்டமானின் இழப்பானது மலையகத்தினை பொறுத்தவரையில் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடந்த பேரிழப்பாகும். அவருடைய துனிச்சலான செயப்பாடுகள் எதற்கும் ஈடு செய்ய முடியாது.மலையகத்தின் ஒரு மலை சாய்ந்ததாகவே கருத வேண்டியுள்ளது.இந்த இழப்பானது மலையகத்திற்கு மாத்திரமன்றி முழு நாட்டிக்கும் ஏற்பட்ட இழப்பாகும் அவருக்காக கண்ணீர் அஞ்சலியினையும் ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம.; என தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -