கொட்டகலை பிரதேசத்திற்கு வழங்கப்படும் குடிநீர் அசுத்தமடைந்து காணப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கொட்டகலை நகர் பிரதேசத்தில் உள்ள 1200 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் குடிநீர் கடந்த மூன்று மாத காலமாக மஞ்சள் நிறத்துடன்,துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .இதனால் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதற்கு ஆபத்து காணப்படுவதாகவும் பொது மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.
கொட்டகலை இருந்து சுமார் ஏழு கீலோ மீற்றர் தொலைவில் பிட்டவின் பகுதியிலிருந்து கொட்டகலை நகருக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
குறித்த குடிநீர் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையாக பெற்றக்கொடுக்கப்பட்ட போதிலும் கடந்த மூன்று மாத காலமாக அசுத்தமடைந்த நிலையிலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் இந்த நீரினை பயன்படுத்துவோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் அவர்கள் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் செய்யாதன் காரணமாக பொது மக்கள் கொட்டகலை வர்த்தக சங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலமை குறித்து ஆராய்வதற்காக வர்த்தக சங்க அங்கத்தவர்கள் குறித்த நீர் பெற்றுக்கொள்ளப்படும்.நீர் மூலங்களை பார்வையிட்ட போது குடிநீர் பெற்றுக்கொள்ளப்படும,; இடத்திற்கு மேல் பகுதியில் நன்நீர் மீன் கிடங்குகள் காணப்படுவதாகவும்,இதற்கு மேலாக ஒரு சில இடங்களில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வுகள் காணப்படுவதாகவும்,ஒரு இடங்களில் பொது மக்கள் குளிப்பதாகவும் இந்த நீர் பெற்றுக்கொள்ளும் இடத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி திறந்த நிலையில் காணப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் அத்தியவசிய தேவைகளின் ஒன்றான குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் இலங்கை நீர் வடிகால் அமைப்பு சபை இதனை பெற்றுக்கொடுப்பதற்காக பொது மக்களிடமிருந்து பணத்தினையும் அறவிடுகின்றது இந்நிலையில் இதனை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவர்களின் கடமை.இதனால் கொரோனாவை விட பாதிப்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றன. இவ்வாறிருக்கும் இலங்கை நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை அசுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் நீர் அசுத்தமடைவதற்கான காரணத்தினை கண்டு பிடித்து அதற்கான தீர்வினை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -