இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான ஆலயடி வேம்பு DS, ADP ஆகியோர்களுக்கு ஜூன் 10 வரை விளக்கமறியல்..


பாறுக் ஷிஹான்-
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.

சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பிரிவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று (28) மாலை நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்த போதே இவ் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்குரிய ஒப்புதல் அடிப்படையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -