பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளுக்கு நஸ்ட்ட ஈடு பெற்றுகொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை


ஹட்டன் கே.சுந்தலிங்கம்-
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகின.இதனால் ஆறுகள் ஓடைகள் கரைபுரண்டோடின மலையகத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடகின.
இந்த வெள்ளப்பபெருக்கு காரணமாக பல விவாசய நிலங்கள் நீரில் மூழ்கின.
கொரோனா மற்றும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மரத்தில் வழுந்தவனை மாடு முட்டியது போல் இவர்கள் மேலம் மேலும் பாதிப்புக்குள்ளாகின.
மலையகப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல விதமான நெருக்கடிக்கு மத்தியிலேயே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் தங்களுடைய தங்க நகைகளை கடைகளில் அடகு வைத்து விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் வங்கி கடன்களை பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயற்கையின் கோர தாண்டவத்தினால் வௌ;வேறு காலங்களில் வௌ;வேறு விதமாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.கோடையில் வரடம்சியிலும் மாரியில் வெள்ளத்திலும் மாறி மாறி பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எமது ஏனைய பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன அது மாத்திரமன்றி
-இலவச உரம்,இலவச விதைகள் பல சலுகைகள் அரசாங்த்தினால் பெற்றுக்கொடுக்கின்ற போதிலும் மலையக பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இவை எதனையும் பெற்றுக்கொடுக்கப்படுவதமதில்லை. ஆகவே இது குறித்த எமது அரசியல் தலைவர்களும் கண்டு கொள்வதில்லை. எமது பகுதிக்கு மாற்றாந்தாயின் நிலைமையே காணப்படுகின்றன. எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு ஏனையவர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளை மலையக விவசாயிகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில் ..
நாங்கள் காலம் காலமாக இந்த விவசாயத்தினை சம்பிதான் வாழ்ந்து வருகிறோம் எங்களது ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் ஐந்து அல்லது பேர் குடும்பத்தில் இருக்கிறார்கள். இந்த விவசாயத்தில் வரும் வருமானத்தினை கொண்டு தான் சாப்பிட வேண்டும்.இந்நிலையில் அடிக்கடி இயற்கை அனத்தங்களால் பாதிப்புக்;குள்கிறோம்,எங்களை பற்றி சிந்திப்பதற்கென்று இன்று எவரும் இல்லாத நிலையே உள்ளன.சில பிரதேசங்களுக்கு மாத்தி;ரம் அரசாங்கம் விவசாயிகளுக்கு எல்லா விதமாக உதவிகளையும் செய்கிறது ஆனால் எங்களுக்கு எதனையும் செய்வதில்லை நாங்கள இந்த நாட்டு பிரஜை இல்லையா?என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -