மதுபான நிலையங்கள், இறைச்சிக்கடைகளுக்கு 5,6 பூட்டு..

ஐ. ஏ. காதிர் கான்-

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் 5 ஆம், 6 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்திற்கான பொசன் பௌர்ணமி தின உற்சவத்தையிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய இரு தினங்களிலும் பல்பொருள் அங்காடிகளில் மதுபான மற்றும் இறைச்சி விற்பனைகளைத் தடை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு, குறித்த இரு தினங்களிலும் இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இடங்கள், கசினோ நிலையங்கள், சூதாட்ட பந்தயங்கள் மற்றும் கிளப்புகள் போன்றவற்றையும் மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -