40 நாட்களின் பின்னர் முதலாவது விமானம் மலேசியாவிலிருந்து 178 பயணிகளுடன் பயணம்.


வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப அந்தெந்த நாடுகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதுபோல இந்தியாவில் தங்கி உள்ள வெளிநாட்டினர், அவரவர் சொந்த நாடுகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மலேசியாவில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 178 பயணிகளுடன் சென்ற விமானம், திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது. விமானத்தில் வந்தவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பேருந்துகள் மூலம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

அங்கு தங்க விருப்பம் இல்லாதவர்கள் ஏற்கனவே புக் செய்து உள்ள விடுதியில் அவர்கள் சொந்த செலவில் தங்கிக்கொள்ளலாம். முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விமான நிலையம் சென்று மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கடந்த 40 நாட்களுக்கு மேலாக தமிழகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் தவித்து வந்தவர்கள் திருச்சி வந்து இறங்கியது அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -