கொவிட்19 முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது இஸ்லாம் மார்க்கத்துக்கு முரணானது


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கொரோனா தொற்றினால் உயிரிழக்கப்படும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது மார்க்கத்துக்கு முரணானது இவ்வாறு எரிக்கப்படுவது மனவேதனையளிக்கிறது என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் சமூக ஆருவலருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் இஸ்லாமிய முறைப்படி ஜனாசாக்களை குளிப்பாட்டும் போது அதனை வேதனை படுத்தவோ,குளிர் நீரால் கழுவவோ முடியாது என்றிருக்க கொரோனா உயிரிழப்பு என்ற போர்வையில் எரிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையின் படி கொவிட்19 உயியிழப்புக்களை அடக்கவும் எரிக்கவும் முடியும் என கூறப்பட்டிருக்கிற போதும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் உயிரிழந்த றினோசா வயது (52) எனும் முஸ்லிம் பெண்ணின் ஜனாசா எரிக்கபுபட்டது அதன் பின் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது இது தொடர்பில் முஸ்லிம்கள் ஜனாதிபதி மீது வைத்திருந்த நம்பிக்கை தற்போது இழந்து வருகிறது சுகாதாரத் துறை பணிப்பாளர் டாக்டர் அனில்ஜாசிங்க இது தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்க முடியாமைக்கான காரணத்தையும் வெளியிடவில்லை.மாத்தறையில் உயிரிழந்த ஜனாசா குறித்த பிரதேச சபை தவிசாளரால் எரிக்கப்படுவதற்கு அனுமதி வழங்காமையும் ஹிரு,தெரன போன்ற ஊடகங்களை தடுத்து நல்லடக்கம் செய்ததையும் அறிவோம்.இந்த நாட்டு ஜனாதிபதி முஸ்லிம்கள் மீது கரிசனை கொள்ள வேண்டும் .ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கான நடை முறைகளை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -