கொட்டகலை பிரதேசத்தில் முதியோர் கோடுப்பனவுகளை 10 நாட்களில் வழங்குவதற்கு புதிய திட்டம் ஒன்றினை வகுத்துள்ளதாக தாபல் நிலையம் தெரிவித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளரும் வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட யுலிபீல்ட், டோனிகிளிப், கிரிலஸபாம், மேபீல்ட் உள்ளிட்ட ஐம்பது தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் இந்த கொடுப்பனவுகளை பெறுவதற்காக வருகை தந்து பெரும் சிரமங்களை அனுபவித்து வந்தனர்.
இதனால் பலர் முததியோர் கொடுப்பனவுகளை பெறுவதற்காக நாலு ஐந்து நாட்கள் வரவேண்டிய நிலையும் ஏற்ப்பட்டன.
முதியோர் ஒவ்வொரு மாதமும் 20 திகதி தொடக்கம் 30 திகதி வரை காலப்குதியில் அதிகாலையிலேயே வருந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டன.
இவர்களின்; சிரமத்தினை கருத்தில் கொண்டு நேற்று (20) திகதி கொட்டகலை தபால் நிலைய பொறுப்பதிகாரியுடன் இடம்பெற்ற கலுந்துரையாடலினை தொடர்ந்து எதிர்வரும் மாதம் முதல் ஐந்துதைந்து தோட்டங்களாக பிரித்து இந்த முதியோர் கொடுப்பனவுகளை 10 நாட்களில் வழங்கி நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறித்த தோட்டங்கள் காட்சிபடுத்துவதற்கும் உரிய தோட்டங்களுக்கு அறிவிப்பதற்கும், தபாலகம் நடவடிக்கைகளை எடுப்பதாக தபால் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் குறித்த தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவுக்கான நெரிசல் குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து முதியோர் கொடுப்பனவுகளை பெறுபவர்கள் புஸ்பா விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.
