நாட்டில் ஏற்பட்டுள்ள் பொரோனா தொற்று பரவல் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் எதிர்நோக்;கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அரசாங்கமும் பொது அமைப்புக்களும் செய்து வருகின்ற நிலையில் சமைய தலங்கள் ஊடாகவும் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நலையில் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத தேவஸ்தானத்தின் பரிபாலன சபையினர் மஸ்கெலியா பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் வரிய குடும்பங்களுக்கு அரசி மற்றும் மா பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர்கள் வீடு வீடாக சென்று பாதிகப்பட்ட எவ்வித நிவாரணமும் கிடைக்காத சுமார் 425 குடும்பங்களுக்கு 10 கிலோ அரசியும் ஐந்து கிலோ மாவும் வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இந்த பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கும் இந்த நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதே வேளை பொகவந்தலா தண்டாயுதபாணி ஆலய அரங்காவலர் சபையினர் பொகவந்தலா ஸ்ரீ புரம்,ஆரியபுரம்,தொண்டமான்புரம்,சௌமியபுரம்,பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களில் வாழும் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு எவ்வத நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த உலர் உணவு பொதிகளில் அரசி,மா,சீனி உட்பட அத்தியவசிய பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்படுள்ளன.

