கடந்த நான்கு தினங்களாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது அடுத்து மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக இன்று(6)திருகோணமலை பொதுச் சந்தையில் மக்கள் முக கவசம் அணிந்து தங்களுடைய பொருட்களை கொள்வனவு செய்ததையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இருந்தபோதிலும் சுகாதாரத்தை பேணுமாறு பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரும் மக்களை தெளிவுபடுத்தியதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.பொது மக்கள் வங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் சம இடைவெளியை பேணியதையும் காணக்கூடியதாக இருந்தது.
கந்தளாய் நகர பகுதிகளில் காலையிலிருந்து வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கந்தளாய் நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கூடிய பகுதிகளுக்கு கிருமிநாசினிகள் பரவுவதை தடுப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் கிருமிநாசினிகள் வீச படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.