காரைதீவு நிருபர் சகா-
அம்பாறை மாவட்டத்தில் 9- வியாழக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது வழமைக்குமாறாக மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
மாவட்டத்தின்மத்தியிலுள்ள அக்கரைப்பற்றில் கொரோன தொற்றுநோயாளி இனங்காணப்பட்டதையடுத்து அப்பெரும்பகுதி முடக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதுவரைகாலமும் பயமின்றி திரிந்த மக்கள் சற்றுபீதிக்குள்ளாகியுள்ளனர். அதனால் வெளியில்நடமாட அஞ்சுகின்றனர்.
இதேவேனைள இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு கடற்கரைப்பிரதேசத்தில் வளையா கிளவள்ளுமீன் கொள்வனவுசெய்ய வந்தவர்கள் சமுக இடைவெளியைப்பேணினார்களா? என்பது கேள்விக்குறியாகவுள்ளதென சமூகஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வழமையாக 200 முதல் 250 வரை கிலோ வளையா மீன் விற்கப்பட்டுவந்தபோதிலும்நேற்று அது 350 ருபாவுக்கு உயர்ந்துள்ளது. கிளவள்ளா 500ருபா வரை உயர்ந்துள்ளது.
அதனையும் மக்கள் கூடிநின்று கொள்வனவு செய்ததைக்காண முடிந்தது.
