மைனஸ் டொலருக்கு சென்ற மசகு எண்ணெயின் விலை - வரலாற்றில் மறக்க முடியாத நாள் நேற்று!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-லகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு சட்டம்
அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலன வாகனப் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலுள்ள விமானங்களும் ஓய்வு எடுத்து வருகின்றன.

இதனால் மசகு எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை நேற்று திங்கள்கிழமை தொடங்கியது முதலே மசகு எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியடைந்தது.

வரலாற்றில் முதல் முறையாக ஒரு பேரல் (158.98 லிட்டர்) மசகு எண்ணெயின் விலை -$37.45 (மைனஸ்) என விற்பனை செய்யப்பட்டது. அதாவது மசகு எண்ணெய் விற்பனையாளர்கள் மசகு எண்ணெய்யை வாங்குபவர்களுக்கு பணம் கொடுத்து எண்ணெய்யை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலைக்கு சமமாகும்.
அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு குறைய காரணமாக கூறப்படுவதாவது:-

*மசகு எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு
*கொரோனா வைரஸால் தேவை குறைவு
*உற்பத்தி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யை சேமித்து வைக்க போதுமான இட வசதியின்மை
*மசகு எண்ணெய்யை வாங்க வர்த்தகர்கள் விருப்பம் காட்டாமை

மசகு எண்ணெயின் விலை ஒரு நாளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வரலாற்றில் முதல்முறையாக இப்படி சரிவை சந்தித்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -