உடனடியாக பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்.-மனோ கணேசன்
றிஸ்கான் முகம்மட்-
நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும்.
ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள் பெரும்பாலானவை, பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காமை தொடர்பில் ஆராயவும்;
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராயவும்;
ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராயவும்;
ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராயவும்;
<உடனடியாக பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும்>
1.எம்பிகளுக்கு சம்பளம், வரப்பிரசாதங்கள் தேவையில்லை.
2.பாராளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை.
3.காணொளி மாநாட்டின் மூலமாக பாராளுமன்ற அமர்வு நடத்தலாம்.
1.எம்பிகளுக்கு சம்பளம், வரப்பிரசாதங்கள் தேவையில்லை.
2.பாராளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை.
3.காணொளி மாநாட்டின் மூலமாக பாராளுமன்ற அமர்வு நடத்தலாம்.