ஷாருக் கான் நடித்த ரா ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களைத் தயாரித்த கரீம் மொரானியின் மகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 4,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 318 பேர் குணமடைந்துள்ளனர். 111 பேர் மரணமடைந்துள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த வைரஸுக்கு பிரபலங்களும் தப்பவில்லை.
ஏற்கனவே பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு இந்த தொற்று இருந்து சிகிச்சைப் பெற்று குணமாகியுள்ளார். இந்நிலையில் ஷாருக் கான் நடித்த ரா ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களைத் தயாரித்த கரீம் மொரானியின் மகள் ஷாஜா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று வந்தார். ஆனால் தொடக்கத்தில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தற்போது அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
ஷாஜா தற்போது, மும்பை நானாவதி மருத்துவமனையில் ஷாஜியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கரீம் மொரானியின் குடும்பத்தார் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
