இது விடயத்தை தைரியமாக மஹிந்த முன் பேசியதை எந்தவொரு முஸ்லிம் காங்கிரஸ் கார பிரதிநிதியும் பாராட்டியதை காணவில்லை.
அதாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கும் காரணம் முஸ்லிம்களின் வாக்குகள் மீதான அவநம்பிக்கையாகும். மஹிந்த அதாவுக்கு எக்கச்சக்கமாக உதவி செய்தார். அதாவால் அக்கறைப்பற்று வளம் கண்டது. சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை வளம் கண்டது. ஆனாலும் 2015 தேர்தலில் இம்மக்கள் மஹிந்தவையும் அதாவுள்ளாவையும் நிராகரித்து சமூகத்துக்கு எந்த உருப்படியான நன்மையும் செய்யாத ஹக்கீமுக்கும் ஐ தே கவுக்குமே ஓட்டுக்களை அள்ளி போட்டனர்.
ஒரு அரசியல்வாதி எப்போதுமே தனக்குரிய ஓட்டு பற்றியே சிந்திப்பான். ஓட்டு கிடைக்கும் என்றால் எதையும் கொண்டு வந்து கொட்டுவான். ஓட்டு கிடைக்காது என்றால் தன் சொந்த சகோதரனையும் வெறுப்பான். இதுதான் அரசியல் யதார்த்தம்.
முஸ்லிம் சமூகம் இந்த் யதார்த்ததை இன்னும் படிக்கவில்லை. இதனால் மேலும் மேலும் இன்னல்களையே அனுபவிக்கிறோம்.
- 2015ல் 99வீத முஸ்லிம்கள் ஓட்டுப்போட்டும் நன்றி கெட்ட அரசாங்கத்தை முஸ்லிம்கள் கண்டனர். மஹிந்தவுக்கு இன்று வரை 20 வீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் ஓட்டு போட்டதில்லை.
- இந்த நிலையில் அதாவுள்ளாவின் இந்த முயற்சி என்பது கோடி சிங்களவரையும் எதிர்த்து நிறைவேற்ற வேண்டிய ஒன்று. அதனை நிறைவேற்றினாலும் முஸ்லிம்களின் ஓட்டு ஒன்று கூட தமது அரசுக்கோ அல்லது அதாவுக்கோ அதிகரிக்காது என்பது அரசுக்கு தெரியும். இதுதான் அதாவின் கோரிக்கை ஒதுக்கலுக்கு காரணமாகும்.
- ஆகவே நாம் அரசை விமர்சிக்கும் நம்மை நாம் சிந்திப்போம். கிழக்கை விடுவித்து, புலிகளை ஒழித்து, வடக்கு கிழக்கை பிரித்து, கிழக்குக்கான மாபெரும் அபிவிருத்திகளை செய்து, மௌலவி ஆசிரியர் நியமனம், பட்டதாரி ஆசிரிய நியமனம் வழங்கி இப்படியான ரணில் சஜித்தால் முடியாமல் போன பாரிய பல விடயங்களை செய்த மஹிந்தவுக்கு நம்மில் எத்தனை பேர் நன்றிக்கடனை செய்துள்ளோம் என்று சிந்திக்க வேண்டும்.
இப்போதுள்ள அரசு 98 வீதம் சிங்கள மக்களால் கொண்டு வரப்பட்ட அரசு. அந்த அரசை நமக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு மாறாக அரசையும் அரச சார்பு முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம்கள் தூற்றிக்கொண்டிருந்தால் அது மேலும் மேலும் அரசுக்கான சிங்கள மக்களின் ஓட்டுக்களையே அதிகரிக்கும்.