அமெரிக்காவில் கொரோனாவால் நமக்கு நேர்ந்தது பயங்கரம்’ என ட்ரம்ப் தெரிவிப்பு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றினாலும், கொரோனா வைரஸ் அமெரிக்காவை பந்தாடுகிறது. உலகின் பிற எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் இவ் வைரஸின் பாதிப்பு மிக அதிகமாகவுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்திலுள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. இவ் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிகையும் 39 ஆயிரத்தையும் கடந்து செல்கிறது.

உலகின் நிதி நகரமென்ற பெருமைக்குரிய நியூயோர்க் நகரம், கொரோனா வைரஸால் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்து வருகிறது. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கியிருக்கிறது.
15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் கொரோனாவின் மையமாக நியூயோர்க் நகரம் மாறியுள்ளது.
நியூயோர்க்கின் அண்டை மாகாணமான நியூஜேர்சியில் 78 ஆயிரம் பேரை கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. 4 ஆயிரம்
பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் இதுவரை 37 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த பரிசோதனை நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவில்தான் பிற நாடுகளில் இல்லாத அளவுக்கு வலுவான, நம்பகரமான, துல்லியமான சோதனை முறையுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக எனது நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்காவிட்டால் உயிரிழப்பு இன்னும் அதிகளவில் இருந்திருக்கக்கூடும்.

1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலானவர்கள் இங்கே இவ் வைரசால் உயிரிழக்கக்கூடும் என கணிப்புகள் இருந்தாலும்கூட 65 ஆயிரம் பேர்வரைதான் உயிரிழப்பு இருக்கும்.

நமது நாட்டுக்கு இப்படி நேர்ந்திருப்பது பயங்கரமான விஷயம்தான். நமக்கு மட்டுமல்ல 184 நாடுகளுக்குமே இது ஒரு பயங்கரமான விஷயம்தான். இது ஒருபோதும் மீண்டும் நடக்கக்கூடாது.

அமெரிக்காவின் விஞ்ஞான அறிவால், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் இறுதி வெற்றி சாத்தியப்படும்.

கடந்த சில மாதங்கள் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் சவாலான மாதங்களாக ஆகிவிட்டன. கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி கடினமானவன். ஆனால் அமெரிக்காவின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -