சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கியவருக்கு விளக்க மறியல்..!

த்தொட புஸ்ஸெல்ல சமூர்த்தி காரியாலயத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரத்தொட புஸ்ஸெல்ல சமூர்த்தி காரியாலயத்தில் நேற்று (17) சமூர்த்தி நிவாரணங்களை பகிர்ந்தளிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது சமூர்த்தி பயனாளிகளுக்கும் குறித்த சமூர்த்தி உத்தியோகத்தருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் சிலர் சமூர்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ரத்தொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் புஸ்ஸெல்ல கம்மடுவ பகுதியை சேர்ந்த நால்வரை ரத்தொட பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -