கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு. -மனோ கணேசன்..!
றிஸ்கான் முகம்மட்-
இன்று காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவர்கள் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்படுவார்கள். அங்கே அவ்வந்த மாவட்ட, பிரதேச பொது சுகாதார அதிகாரிகள், இவர்களை பொறுப்பேற்று, தமது வீடுகளில் தனிமை நிலைமையில் இவர்கள் இருப்பதை கண்காணிப்பார்கள்.
வெளிமாவட்ட மக்கள் கொழும்பிலிருந்து வெளியேறுவது, கொழும்பில் சமூக இடைவெளிக்கு இடையூறாக அமையும் நெருக்கடியையும் தணிக்க உதவும். இது கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் என நான் இந்த கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினேன்.
இந்த நபர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்கும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும். இதுபற்றி இன்று நடக்கும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். எக்காரணம் கொண்டும் இந்நடவடிக்கை தாமதாமாகும் பட்சத்தில் இந்த பிரிவினருக்கு கொழும்பிலே வாழ்வதற்கான வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.
கொழும்பு மாவட்ட முன்னாள் எம்பீக்களும், மாவட்ட செயலாளர் தலைமையில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் போது, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் சமர்பிப்பார்.
