வேளான்மையை அழித்த ஐம்பது மாடுகளை கட்டிய விவசாயிகள்.




எஸ்.எம்.எம்.முர்ஷித்-


வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தின் விவசாய செய்கையினை துவம்சம் செய்த மாடுகளை விவசாயிகள் பிடித்து கட்டி வைத்த சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் விவசாய செய்கை செய்யப்பட்ட வேளான்மையில் நாற்பது மேற்பட்ட ஏக்கர் விவசாய வேளான்மையை மாடுகள் துவம்சம் செய்துள்ளது.

இதனால் குறித்த விவசாயிகளால் வேளான்மையை துவம்சம் செய்த ஐம்பது மாடுகளை பிடித்து கட்டி வைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கிராம அதிகாரி வருகை தந்து விவசாயிகள் மற்றும் மாடு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி தொடர்ந்து இவ்வாறான பிரச்சனைகள் வராத வகையில் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் கடன் பட்டு விவசாய செய்கையை மேற்கொண்டும் எங்களுக்கு மாடுகள் வேளான்மையை துவம்சம் செய்யாத வகையில் மாடுகளை வேறு இடங்களில் மேய்ப்பதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாய ஆரம்ப கூட்டத்தில் மாடுகளை வேறு மேய்ச்சல் தரைகளில் மேய்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளை நிம்மதியாக விவசாயம் செய்ய வழிவகை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவும், நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் போடப்பட்டமை காரணமாகவும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் விவசாயிகள் விவசாய செய்கையை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியதை தொடர்ந்து விவசாயிகள் சிறுபோகச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -