கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் தொற்று நீக்கி விசிறல்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினரால் தொற்று நீக்கி விசிறும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை தளர்த்தப்படும் நிலையில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் இடம்பெற்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச பாடசாலைகள், வங்கிகள், பொதுச் சந்தை கட்டடத் தொகுதிகள், அரச அலுவலகங்கள் உட்பட்ட பல பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார பரிசோதகர்கள், தெளிகருதி இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் பாதுகாப்பில் அதிக கரிசனை காட்டி வருகின்றனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -