பின்தங்கிய மத்தியமுகாம் மக்களுக்கு அசிஸ்ற் ஆர்ஆர் உதவி.



காரைதீவு  சகா-

கொரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த மத்தியமுகாம் 06ஆம் பிரிவு மக்களுக்கான உலருணவுப்பொதிகள் விநியோகம் நேற்று நடைபெற்றது. நாவிதன்வெளிபிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் கிராமசேவை உத்தியோகத்தர். எஸ்.வினோதனின் தெரிவில் இந்த பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன. 

சமுக செயற்பாட்டாளர்களான கே.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா எஸ்.வினோஜ்குமார் ஆகியோர் அவற்றை வழங்கிவைத்தனர்.

புனர்வாழ்வும் புதுவாழ்வும் (அசிஸ்ற் ஆர்ஆர்- Assist R.R.) அமைப்பின் கொரோனா உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.

கொரோனா அச்சத்தால் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவு நிவாரணப்பொதி வழங்கும் திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்குப்பிரதேசங்களில் மிகவும் நலிவுற்ற இடங்களில் வழங்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக நெடுங்கேணி தங்கவேலாயுதபுரம் வினாயகபுரம் திராய்க்கேணி வளத்தாப்பிட்டி கோபாலபுரம் நாவிதன்வெளி அன்னமலை ஆலையடிவேம்பு நாவற்காடு
போன்ற பின்தங்கிய இடங்களுக்கு இப்பொதிகள் வழங்கப்பட்டன.

அவசர உதவியாக முதற்கட்டமாக ஒவ்வொன்றும் 1000ருபா பெறுமதியான 900 உலருணவுப்பொதிகள் அம்பாறை மாவட்டத்தில் வழங்கிவைக்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதனின் வேண்டுகோளின்பெயரில் 300 பொதிகளும் சமுகசேவையாளர் வி.ரி.சகாதேவராஜாவின் வேண்டுகோளில் 300 பொதிகளும் திருக்கோவில் பிரதேசத்திற்கு பிரதேசசெயலாளர் ரி.கஜேந்திரனிற்னு 150பொதிகளும் ஆலையடிவேம்டபு பிரதேசசெயலாளர் க.லவநாதனின் வேண்டுகோளின்பேரில் 150பெதிகளும் மொத்தமாக 900 பொதிகள வழங்கப்பட்டன என அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் தெரிவித்தார்.

இலங்கையில் வடக்கில் முதற்கட்டமாக வடக்கில் நெடுங்கேணியில் 2000பொதிகள் கிழக்கில் 900பொதிகள் வழங்கப்பட்டதாக அமைப்பின் பொருளாளர் எந்திரி நல்லையா சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். இரண்டாம் கட்டமாக மேலும் சில பின்தங்கிய பகுதிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அசிஸ்ற் ஆர்ஆர்; அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றி அமல்ராஜ் ஆகியோரிடம் சமுகசேவையாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளின் பேரில் 300குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -