வட்டியில்லாக் கடன் வழங்கல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-
னாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிந்தனையில் உதித்த 'சஹன பியவர' சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.முஸம்மிலின் வழிகாட்டலில் சமுர்த்தி வங்கியினால் வட்டியில்லாக் கடன் வழங்கும்; நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி வங்கியினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஒன்பது கிராம சேவகர் பிரிவுவிலுள்ள சமுர்த்தி பெறும் மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சகிதம் கலந்து கொண்டு நிதிகளை வழங்கி வருகின்றனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 5112 சமுர்த்தி பயனாளிகள் உள்ள நிலையில் 'சஹன பியவர' சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத் திட்டத்திற்கமைய ஐயாயிரம் ரூபாய் வீதம் சனிக்கிழமை வரை 3351 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -