ஈஸ்டர் தாக்குதலின் நினைவாக காரைதீவு மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிய சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்.



நூருள் ஹுதா உமர்-

நாட்டில் கொரோணா தொற்று பரவிவருவதனால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் சகலரும் கரிசனை செலுத்தி வரும் இவ்வேளையில்,
கொரோணா தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் நோக்கில் இடம்பெற்ற நிவாரண செயலனியில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசல் முன்மாதிரியான செயற்பாடொன்றை இன்று வெளிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டை உலுக்கிய ஈஸ்டர் குண்டுதாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறும் முகமாக சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள காரைதீவு பிரதேசத்தில் வசிக்கும் 50 வசதிகுறைந்த தமிழ் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.வை. எம். ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், காரைதீவு கோயில் நிர்வாகிகள், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. ஹமீட், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல். எம். நஜிமுதின், மாளிகைக்காடு மேற்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்க, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அல்ஹாஜ் ஏ.எம். நௌபர், சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள், சாய்ந்தமருது அனைத்து பள்ளிவாசல்களின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காரைதீவு பிரதேசத்தில் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு தகுதியாக இனம்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள 50 குடும்பங்களுக்கான நிவாரண உதவித்தொகையை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவரிடமிருந்து காரைதீவு கோயில் நிர்வாகிகள், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், மாளிகைக்காடு மேற்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம் ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் விரைவில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -